செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது .
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லி மத்திய நீர்வள அமைச்சகத்தின் சேவா பவனில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.
கர்நாடகா உரிய நீரை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக அரசின் பிரதிநிதிகள் முன் வைத்தனர்.
செப்டம்பர் மாதத்திற்கான 28 டி.எம்.சி தண்ணீரையும் அக்டோபர் மாதத்திற்கான 20 டி.எம்.சி தண்ணீரையும் சேர்த்து, மொத்தம் 48 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் மாத நிலுவை நீரை வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.