துபாயின் இரண்டாவது பெரிய வணிகக் கூட்டாளியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
2021 முதல் அரையாண்டில் துபாயுடன் ஒரு இலட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு வணிகம் செய்துள்ள சீனா முதலிடத்தில் உள்ளது.
77ஆயிரம் கோடி ரூபாய்க்கு வணிகம் மேற்கொண்டுள்ள இந்தியா துபாயின் இரண்டாவது பெரிய வணிகக் கூட்டாளியாக உள்ளது. அமெரிக்கா, சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
துபாயுடனான இந்தியாவின் வணிகம் 2020ஆம் ஆண்டின் முதல் அரையாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டில் 74 விழுக்காடு அதிகரித்துள்ளது.