டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்றத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார்.
971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்தப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மோடி, சுமார் ஒரு மணி நேரம் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.