ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, குலாப் புயலை எதிர்கொள்ள ஆந்திர அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
புயலை சமாளிக்கவும், நிவாரணப்பணிகளுக்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அப்போது உறுதி அளித்ததாக மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதைப் போன்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குடன் பேசி, மத்திய அரசு எல்லா விதமான உதவிகளையும் செய்யும் என தெரிவித்ததாக மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குலாப் புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசும் தயார் நிலையில் உள்ளதாக முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.தெற்கு ஒடிசாவின் 11 கடற்கரை மாவட்டங்களிலும் 24 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும், 42 மாநில பேரிடர் மீட்பு குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.