மூன்றாவது அலை என ஒன்று வீசாமல் இருந்தால், தசரா விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றங்களில் முழுமையான நேரடி விசாரணை துவங்கும் என நம்புவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கூறியுள்ளார்.
தமக்கும், புதிதாக பதவி ஏற்ற 9 நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் அளித்த பாராட்டு விழாவில் இதைத் தெரிவித்த அவர், கொரோனா காலகட்டத்தில் கூட நீதிமன்றங்களை திறக்க தயாராக இருந்தாலும், பெரும்பாலான வழக்கறிஞர்களும், மூத்த வழக்கறிஞர்கள் பலரும் நேரடி விசாரணை வேண்டாம் என கூறியதால் அந்த முடிவு கைவிடப்பட்டதாக தெரிவித்தார்.
நீதிமன்றங்களில், உயரமான இருக்கைகளில் கண்ணாடித் தடுப்புகளுக்குப் பின் இருப்பதால் நீதிபதிகளுக்கு பாதிப்பு இருக்காது என்றாலும், வழக்கறிஞர்களும், நீதிமன்ற இதர பணியாளர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்தார்.