செவ்வாய்க் கோளுக்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் விண்வெளியில் ஏழாண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இஸ்ரோ தலைவராக ராதாகிருஷ்ணன் இருந்தபோது 2013ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் நாளில் மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
செப்டம்பர் 24ஆம் நாளில் அது செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாகக் கொண்டுசெலுத்தப்பட்டது.
ஆறரை ஆண்டுகள் செயல்படும் எனக் கணிக்கப்பட்ட இந்த விண்கலம் அதைத் தாண்டி ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது மனநிறைவளிப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த விண்கலம் ஓரளவுக்கு நல்ல நிலையிலேயே இருப்பதாகக் கருதலாம் என மங்கள்யான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.