ஜம்மு காஷ்மீரின் தால் ஏரிப்பகுதியில் நடைபெற்ற வான் சாகசங்கள் காண்போரை பிரமிக்க வைத்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கொண்டாடப்படும் 'அம்ரித் மகோத்சவ்' நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக வான் சாகசங்கள் நடைபெற்றன.
இந்திய விமானப் படையின் விமானங்கள் விண்ணில் அணிவகுத்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் வானில் தலைகீழாக பறந்தது காண்போரை சிலிரிக்க வைத்தது.
பாராச்சூட் மூலமும் வீரர்கள் வானில் விதவிதமான சாகசங்களை நிகழ்த்தினர்.