கடந்த 2004 ல் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசு ஆட்சிக்கு வந்த போது, மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக சோனியா காந்தியோ, மூத்த தலைவர் சரத் பவாரோ பிரதமராக வந்திருந்தால், காங்கிரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ள நிலை உருவாகி இருக்காது என மத்திய அமைச்சரும் இந்திய குடியரசுக் கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் துணை அதிபராக வரும் போது, சோனியா காந்தி இந்தியாவில் பிரதமராக வருவதில் என்ன தவறு என அவர் இப்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
2004 ல் சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என தாம் பரிந்துரைத்த தாக கூறியுள்ள அவர், அதை ஏற்காவிட்டாலும், சரத் பவாரை பிரதமராக நியமித்திருந்தால் காங்கிரசுக்கு இப்போதுள்ள கதி ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.