கேரளாவில் ஹோட்டல்கள், மதுபான பார்கள் போன்றவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாகும். ஏசியைப் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு முறையாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு நீச்சல் குளங்களிலும் உள்விளையாட்டு அரங்குகளிலும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புகள் குறையக் குறைய மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்