யுனைட்டட் பிரேவரீஸ் உள்ளிட்ட 3 பீர் தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டாக சதி செய்து பீர் விலையை உயர்த்திக் கொண்டதாக கூறி அவற்றுக்கு CCI எனப்படும் இந்திய தொழில் போட்டி ஆணையம் பெரும் அபராதம் விதித்துள்ளது.
இவற்றில் யுனைட்டட் பிரேவரீஸ் நிறுவனத்திற்கு 750 கோடி ரூபாயும் கார்ல்ஸ்பர்க் நிறுவனத்திற்கு ரூபாய் 120கோடி ரூபாயும் மற்றொரு நிறுவனமான AB InBev நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம், தொழில் போட்டிச் சட்ட பிரிவு ஒன்றின் படி முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அகில இந்திய மது உற்பத்தியாளர் சங்கத்தின் துணையுடன் இந்த கூட்டு விலை நிச்சய சதி நடத்தப்பட்டதாகவும், அதுவும் தொழிற் போட்டி விதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009 முதல் 2018 அக்டோபர் வரை புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் இந்த முறையில் விலை உயர்த்தி விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.