பயங்கரவாத இயக்கங்களுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவது குறித்தும், அதைக் கண்காணிக்க வேண்டியது குறித்தும் பிரதமர் மோடியுடன் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேசியுள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பில், இருநாட்டு நலன்கள், இந்தோ பசிபிக் மண்டலத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சு நடத்தினர். அப்போது, பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது குறித்தும், அவை இந்தியா, அமெரிக்கா ஆகியவற்றின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானைக் கேட்டுக்கொண்டதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பல பத்தாண்டுகளாக இந்தியா பாதிக்கப்படுவது குறித்தும், அதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் பிரதமர் மோடி கூறியதைக் கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.