விரைவில் எல்ஐசியின் பங்குகள் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் அவற்றை சீன முதலீட்டாளர்கள் வாங்குவதை தடை செய்து விட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு வர்த்தக சந்தையில் 60 சதவிகிதத்தை எல்ஐசி கையாள்கிறது. இந்த நிலையில் எல்ஐசியின் பங்குகளை வெளியிட்டு சுமார் சுமார் 66 லட்சம் கோடி ரூபாய் திரட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதில் 20 சதவிகிதம் அளவுக்கு வெளிநாட்டு மூலதனத்தை அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதே நேரம் கிழக்கு லடாக்கில் நடந்த கால்வன் தாக்குதல் காரணமாக முக்கிய துறைகளில் சீனாவின் முதலீட்டை தடுப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால், எல்ஐசியின் பங்குகளை சீன முதலீட்டாளர்கள் வாங்க அனுமதிக்க கூடாது என்பதிலும் அரசு உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.