அசாமில் வனவிலங்குகளை வேட்டையாடுவதை கைவிட்டு சரணடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ரைமோனா தேசிய பூங்காவில் மான், காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி அவற்றின் கொம்புகளை கள்ளச் சந்தையில் விற்றுவந்த 57 பேர் BTC என்றழைக்கப்படும் Bodoland Territorial Council இடம் சரணடைந்தனர்.
உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு ஆயுதங்களுடன் அவர்கள் சரணடைந்த நிலையில், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தலா 50 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.