கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க
மத்திய அரசுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து அல்லாமல் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.