ஆடி நிறுவனம் தனது சக்திவாய்ந்த எலக்ட்ரிக் கார்களை வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆடி இ-டிரான் ஜிடி , ஆர்எஸ் ஜிடி ஆகிய மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இ-டிரான் ஜிடி ரக காரின் துவக்க விலை ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் என்றும் ஆர்எஸ் ஜிடி ரக காரின் விலை 2 கோடியே 5 லட்ச ரூபாய் என்றும் தெவிவிக்கப்பட்டுள்ளது. GT ரக கார், மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 4.1 விநாடிகளிலும், RS ரக கார் அதே வேகத்தை 3.3 வினாடிகளிலேயே எட்டும் என கூறப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 487 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம் எனவும் பார்ஸ்ட் சார்ஜரில் 5 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்றும் ஆடி நிறுவனம் கூறியுள்ளது.