ஆதார் தகவல்களை திருட சீன ஹேக்கர்கள் முயற்சி மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், பல அடுக்கு பாதுகாப்பு உள்ளதால் தகவல்களை நெருங்க கூட முடியாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஆதார் தகவல்கள், டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித் தாள் ஆகியவற்றின் தகவல்களை சீன அரசின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் திருடியதாக, சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Recorded Future Inc தெரிவித்துள்ளது. Winnti மற்றும் Cobalt Strike ஆகிய உளவு மென்பொருட்களை ஆதார் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் கம்பயூட்டர்களில் ஊடுருவச் செய்து கடந்த பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் டேட்டாக்கள் திருடப்பட்டதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த உளவு மென்பொருட்கள், சீனாவின் APT எனப்படும் சைபர் அச்சறுத்தல் குழுக்களால் அரசு ஆதரவுடன் கையாளப்படுபவை என கூறப்படுகிறது. ஆனால் ஆதார் தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.