கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டின் தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
இதுகுறித்து இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்கள், கொரோனா பாதித்து போராடி வரும் பெற்றோரின் மாணவர்கள், வளர்ப்பு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை வழங்க பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.