தனது ஒன்பிளஸ் செல்போன் வெடித்ததாக குற்றஞ்சாட்டியிருந்த டெல்லியை சேர்ந்த வழக்கறிஞருக்கு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 8ஆம் தேதி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு-2 5ஜி ரக செல்போன் திடீரென அதிக சூடாகி வெடித்ததாக வழக்கறிஞர் கவுரவ் குலாட்டி குற்றஞ்சாட்டி இருந்தார்.
இது குறித்து அவரது இடத்திற்கு விசாரிக்கச் சென்ற ஒன்பிளஸ் நிறுவனத்தினரிடம் செல்போனை தர மறுத்த வழக்கறிஞர், ஆதாரம் அழிக்கப்பட வாய்ப்பிருந்ததால் அதனை வழங்கவில்லை என விளக்கமளித்திருந்தார்.
இதனையடுத்து குலாட்டி ஒன்பிளஸ் நார்டு செல்போன் வெடித்ததாக கூறி ஷேர் செய்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி, நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரவில்லை எனில் குலாட்டி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்பிளஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.