பஞ்சாபின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர். சரண்ஜித் சிங்குடன் காங்கிரஸ் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சுக்ஜிந்தர் ரந்தாவாவும் அமைச்சராக பதவி ஏற்றார்.
பஞ்சாபின் முதலாவது தலித் முதலமைச்சரான சரண்ஜித் சிங் சன்னி, மாநிலத்தின் 16 ஆவது முதலமைச்சராவார். உட்கட்சி எதிர்ப்பால் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.