செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

2 ராக்கெட்டுகளை முழுவதும் இந்தியாவில் தயாரிக்கத் திட்டம்.. விண்வெளித் துறை தகவல்

Sep 19, 2021 10:29:22 PM

ஜிஎஸ்எல்வி மார்க் 3, எஸ்எஸ்எல்வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகளை முழுவதும் இந்தியத் தொழில்நிறுவனங்களிடம் தயாரித்துப் பெறுவதற்கு விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் உள்நாட்டிலேயே பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை முழுவதும் தயாரிக்க விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பங்களை 3 நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது.

எச்ஏஎல் - எல் அண்டு டி, பிஇஎல் - அதானி - பிஇஎம்எல், பெல் ஆகியன இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக நியூஸ்பேஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இவற்றைப் பரிசீலித்து ஏதேனும் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் நடைமுறை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடிவடையும் என்றும், தேர்வாகும் நிறுவனத்துக்கு 5 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்பின் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டைத் தயாரிக்க விரும்பும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார். இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டு வரும் எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டம் வெற்றிபெற்று விட்டால், தொழில் நிறுவனங்களிடம் ராக்கெட் தயாரிக்க ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விண்வெளித் துறை தொடர்பான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்யும் என இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Advertisement
ஐஃபோன் 16 சீரிஸ் விலை - இந்தியாவை விட அமெரிக்கா, துபாய், கனடாவில் விலை குறைவு
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஜனநாயக மரபுகளைப் பேணி ஒவ்வொரு நாடும் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடியை கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது: அமித் ஷா
புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்த பக்தர்கள்
மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றார்
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
2026, மார்ச் மாதத்துக்குள் நக்ஸலிசம் முற்றிலும் துடைத்தெறியப்படும் - அமித் ஷா

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement