சீரோடைப்-2 டெங்கு காய்ச்சல் பரவுவதால் அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலை விடவும் அதிக சிக்கல் நிறைந்த பாதிப்புகளை சீரோடைப்-2 டெங்கு ஏற்படுத்தும். எனவே ஆரம்பத்திலேயே அறிகுறிகளை கண்டுபிடிக்கவும், டெங்கு தடுப்பு உதவி மையங்களை ஏற்படுத்தவும், டெங்கு லார்வா கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறும் சுகாதார அமைச்சகம் நடத்திய உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் விடப்பட்டது.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, குஜராத்,கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தெலங்கான ஆகிய 11 மாநிலங்களில் சீரோடைப்-2 டெங்கு பரவுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது