பண்டிகைக்கால நெரிசலைத் தவிர்க்க உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையையும் பயணிகளின் எண்ணிக்கையையும் 85 சதவீதம் வரை அதிகரிக்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக விமான சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 72 புள்ளி 5 சதவீத விமானங்களை இயங்க அனுமதி கிடைத்தது.
தற்போது அது 85 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விமான கட்டண வரம்பு 30 நாட்களில் இருந்து 15 நாட்களுக்கு மட்டுமே என்று குறைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குப் பிறகு விமானக் கட்டணங்களை விமான நிறுவனங்கள் மாற்றிக் கொள்ளவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.