கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட எட்டு உயர் நீதிமன்றங்களில் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்கவும் ஐந்து தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் அமர்வின் இரண்டு நாட்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஐந்து தலைமை நீதிபதிகள், 28 நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.