பிரதமர் மோடியின் 71ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், ராகுல்காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிரதமர் மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். தேசத்திற்கு சேவை செய்வதில் மோடியின் அர்ப்பணிப்பும், உறுதியும் அளப்பரியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்தியுள்ளார்.