இந்திய விமானப் படைக்கு இருபத்து நான்கு second-hand மிராஜ் 2000 போர் விமானங்களை இந்திய விமானப்படை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 35 ஆண்டுகளாக இந்திய விமானப் படையில் உள்ள மிராஜ் 2000, கார்கில் போர் காலகட்டத்தில் இருந்தே முன்னணி போர் விமானமாக உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதலின்போதும் மிராஜ் போர் விமானங்கள் சிறப்பாக செயல்பட்டன. அவற்றை மேம்படுத்த வேண்டிய சூழலில், மிகமுக்கியமான 300 உதிரி பாகங்களுக்கு உடனடி தேவை ஏற்பட்டுள்ளது. எனவே second-hand முறையில் 24 மிராஜ் போர் விமானங்களை வாங்கி அவற்றின் உதிரி பாகங்களை பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒரு விமானம் 11.25 லட்சம் யூரோக்கள் என்ற விலையில், 2.7 கோடி யூரோக்களுக்கு இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளன என்றும், கண்டெய்னர்களில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.