தெலங்கானா மாநிலத்தில், "மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்" நிறுவனம் 750 கோடி ரூபாய் முதலீட்டில், தங்க நகை தொழிற்சாலை அமைக்க உள்ளது. தலைநகர் ஹைதராபாத்தில், தொழில்துறை அமைச்சர் ராமா ராவிற்கும், மலபார் நிறுவன சேர்மேன் அகமதுக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில், உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தொழிற் பூங்காவில் மலபார் நிறுவனம் தங்க நகைத் தொழிற்சாலை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சுமார் 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மலபார் கோல் அண்ட் டைமண்ட்ஸ் தங்க நகை ஆலை மூலம் 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.