இந்தியாவில் பதிவாகி வரும் மொத்த கொரோனா பாதிப்பில் சுமார் 68 சதவீதம் கேரளாவில் உறுதி செய்யப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியிருப்தாக கூறினார். தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் 68 மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் 5 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது என்றும் ராஜேஷ் பூசன் தெரிவித்தார்.