விற்பனையை தொடங்கிய முதல் நாளில் மட்டும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான எஸ் 1 ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்திருப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒட்டுமொத்த இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒரு நாளில் விற்பனை செய்ததைக் காட்டிலும் இது அதிகம் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. முதல் 24 மணி நேரத்தில் சராசரியாக ஒவ்வொரு வினாடிக்கும் 4 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஒ பவிஷ்அகர்வால் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் வாகனங்களை தவிர்த்து எலக்டிரிக் வாகனங்களை வாங்க மக்கள் உறுதி பூண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். சலுகை விலையில் ஓலா ஆப் மூலம் முன்பதிவு செய்து ஸ்கூட்டரை வாங்குவதற்கு இன்றே இறுதி நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.