அமெரிக்காவில் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்ல உள்ள பிரதமர் மோடி, முன்னதாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டுத் தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி பேச உள்ளார்.
வாஷிங்டனில், வரும் 23 ஆம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகாவுடன் பேச உள்ள மோடி, 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசுடன் முதன்முறையாக நேரில் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது இந்தோ-பசிபிக் பிராந்திய அரசியல் நிலவரம், பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகள், ஆப்கன் விவகாரம், கொரோனா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவார் என கூறப்படு