கொரோனா இன்னும் 6 மாதங்களில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாகவும், என்டமிக் எனப்படும் உள்ளூர் நோயாகவும் மாறி விடும் என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் சுஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்த அவர், கொரோனா பரவல் மக்களிடம் தொடர்ந்து நீடிக்கும் என்றாலும் அதை கையாளுவது படிப்படியாக எளிதாகி விடும் என்றார். கொரோனாவின் மரபணு மாற்ற வைரசுகளால் மட்டும் 3 ஆம் அலை வீசும் என கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.
நோய் தீவிரம் மற்றும் இறப்பு எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் கொரோனாவை சமாளிப்பது எளிதானது என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் கொரோனாவின் புதிய மரபணு மாற்ற பரவல் இல்லை என்ற அவர், சி1.2, மியூ ஆகிய கவலை தரும் வைரசுகள் நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறினார்.