தொலைத் தொடர்பு துறையில் அந்நிய முதலீடு 100 சதவீதமாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டண பாக்கியை செலுத்த 4 ஆண்டுகால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தொலைத் தொடர்புத்துறைக்கான முக்கிய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 9 சீர்திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தொலைத் தொடர்பு துறைக்கு அந்நிய நேரடி முதலீட்டு வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ளலாம். இதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் புதிய விதிகளில் சேர்க்ப்பட்டுள்ளன.
மேலும் மத்திய அரசுக்கு கட்டண பாக்கி செலுத்த வேண்டிய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 4 ஆண்டு கால அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது.
வாகனம் மற்றும் டிரோன் உற்பத்தியை அதிகரிக்கவும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 26 ஆயிரத்து 58 கோடி ரூபாய் நிதி வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏழரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.