5 ஜி எனப்படும் 5ம் தலைமுறை அலைக்கற்றை ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 5ஜி ஸ்பெக்ட்ரம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏலம் விடப்படும் என்று கூறிய அவர், முடிந்தால், ஜனவரி மாதமே ஏலம் விட முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொலைத்தொடர்பு துறையின் வலுவான ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காகவும், சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்காகவும் இந்தத் துறையில் மாற்றங்கள் தேவை என்றும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.