தீர்ப்பாயங்களுக்கு நிறைய பெயர்களைப் பரிந்துரைத்திருந்தும் ஒருசிலரை மட்டும் நியமித்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேசியக் கம்பெனிச் சட்டத் தீர்ப்பாயத் தேர்வுக்குழுவில் தானும் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவித்தார்.
அதற்கு 544 பேரிடம் நேர்காணல் நடத்தி நீதித்துறையைச் சேர்ந்த 11 பேரையும், துறைசார் வல்லுநர்கள் 10 பேரையும் பரிந்துரைத்ததாகவும் அவர்களில் ஒருசிலரை மட்டும் நியமித்துவிட்டு மற்றவர்களைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திலும் இதேபோன்று நடந்திருப்பதாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல், பரிந்துரைகளைப் பின்பற்றாமல் இருக்க அரசுக்கு உரிமையுண்டு எனத் தெரிவித்தார். அரசின் அணுகுமுறை துரதிருஷ்டமானது என்றும், அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க கொரோனா சூழலில் நாடு முழுவதும் சென்று நேர்காணல் நடத்தியது எல்லாம் வீண்தானா என நீதிபதி வினவினார்.