கேரளாவில் கொரோனாவின் உச்சகட்டம் கடந்து விட்டதாக டெல்லி எய்ம்ஸ்-ன் சமூக மருத்துவத் துறை பேராசிரியர் Dr.சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். கடந்த 2, 3 மாதங்களாக கேரளாவின் தொற்று பரவல் நிலவரத்தை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளதாகவும், அடுத்த 2 வாரங்களில் அங்கு தொற்று எண்ணிக்கை குறையத் துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செப்டம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தொற்று எண்ணிக்கை இப்போது பாதியாக குறைந்து சுமார் 16 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. கேரளாவில் முன்பு நடத்தப்பட்ட சீரோ சர்வேக்களில் பலருக்கு நோய் தொற்றும் அபாயம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் மக்களில் 46 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி காரணமாகவோ, அல்லது தொற்று ஏற்பட்டதன் விளைவாகவோ ஆன்டிபாடீஸ் உருவானது தெரியவந்துள்ளது.