சிங்கிள் டோஸ் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட்-ன் 3 ஆம் கட்ட கிளினிகல் சோதனைகளை நடத்த டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கி உள்ளார்.
கடந்த மாதம் நடந்த மத்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பின் கூட்டத்தில் இந்த சிங்கிள் டோஸ் தடுப்பூசி சோதனைக்கு அனுமதி வழங்கலாம் என நிபுணர் குழுவினர் பரிந்துரைத்தனர். அதற்காக ரஷ்யாவில் நடத்தப்பட்ட சோதனை முடிவுகளை தாக்கல் செய்யுமாறு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
சோதனை முடிவுகளுக்குப் பிறகு 25 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க ரஷ்யாவின் காமாலயா ஆய்வகத்துடன் டாக்டர் ரெட்டிஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.