ஒடிசா மாநிலத்தில் கன மழையால் சரக்கு ரயில் தடம் புரண்டு 9 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன.
பிரோஸ்பூரில் (Firozpur) இருந்து குர்தா சாலை நோக்கி கோதுமை ஏற்றி சென்ற சரக்கு ரயில் அதிகாலை இரண்டரை மணியளவில் அங்குல் நகர் அருகே உள்ள பாலத்தின் மீது சென்ற போது தடம் புரண்டு நந்திரா (Nandira) ஆற்றில் கவிழ்ந்தது.
9 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்த போதும் எஞ்சின் பாலத்தின் மீது நின்றதால் ஓட்டுநரும், இதற ஊழியர்களும் உயிர் தப்பினர். அப்பகுதியில் பெய்த கன மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து ரயில் தடம் புரண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவ்வழியாக செல்ல இருந்த 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.