இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக உருவாக்கியுள்ள சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ், உத்தர பிரதேசத்தில் தயாரிக்கப்பட உள்ளது.
இதற்காக லக்னோ-கான்பூர்-ஜான்சி பாதுகாப்பு காரிடாரில் 300 கோடி ரூபாய் செலவில் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அடுத்த 3 ஆண்டுகளில் 100 க்கும் அதிகமான பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டிஆர்டிஓவும், ரஷ்யாவின் NOPM அமைப்பும் சேர்ந்து பிரம்மோசை உருவாக்கியுள்ளன. ரஷ்யாவின் P-800 Oniks குரூஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்திலான பிரம்மோசை வடிவமைப்பதில் டிஆர்டிஓ-வின் கீழ் ஏற்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றியது.