மகாராஷ்டிரத்தில் கனமழையால் நாசிக்கில் கோதாவரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம்பாய்வதால் கரையோரமுள்ள கோவில்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மராத்வாடா பகுதிகளிலும் தென்மேற்குப் பருவமழை இறுதிக்கட்டமாகத் தீவிரமடைந்துள்ளது.
நாசிக் மாவட்டத்தில் கனமழை பெய்ததால் கோதாவரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம்பாய்கிறது. இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோவில்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன.