குஜராத் மாநில புதிய முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் பதவி ஏற்றுக் கொண்டார்.
அகமதாபாத் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதவி விலகிய முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குஜராத் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் முக்கிய தலைவர்கள் இருந்த நிலயில், முதல்முறை எம்எல்ஏவான பூபேந்திர பட்டேல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுள்ளார். அமைச்சர்கள் வேறொரு நாளில் பதவி ஏற்பர்.