விடுதலைப் போராட்டத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடநூல்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் எனக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
அப்போது மாநில அரசுகளும், பல்கலைக்கழகங்களும் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாகப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம், வேளாண் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் ஆகியன தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.