ஆந்திராவில் சாலையோர கடையில் இரண்டு போலீசார் துணிகளை திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சித்தூரில் நடைபாதையில் சிறு வியாபாரிகள் துணிக்கடை நடத்தி வரும் நிலையில், இரவு நேரத்தில் துணிகளை அங்கேயே தார்பாய் போட்டு மூடிவைத்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த வாரம் நள்ளிரவில் அங்கு வந்த இரண்டு காவலர்களில் ஒருவர் நோட்டமிட்டப்படி நிற்க, மற்றொருவர் மூடி வைக்கப்பட்டிருந்த மூட்டையில் இருந்து சில துணிகளை திருடிச்சென்றார்.
இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், இதுகுறித்து வியாபாரி அளித்த புகாரின் பேரில் துணிகளை திருடிய ஆயுதப்படை எஸ்.ஐ. முகமது பாஷா மற்றும் ஆயுதப்படை கான்ஸ்டபிள் இம்தியாஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.