பாரதியாரின் கவிதைகள் அவற்றை வாசிப்பவரிடம் நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாரதியார் வாழ்ந்த வீட்டில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்கள், பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், தமது கையால் அவர் எழுதிய பத்திரிகை பிரதி உள்ளிட்ட ஆவணங்களைப் பார்வையிட்டனர். அங்குள்ள மணிமண்டபத்திற்குச் சென்ற அமைச்சர்களுக்கு கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதியரின் கவிதைகளை குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறினார்.