சோமட்டோ நிறுவனம் மளிகைப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்கும் சேவையை செப்டம்பர் 17ஆம் நாளுடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இணையவழியில் உணவுகளை ஆர்டர் பெற்று வாடிக்கையாளர்களின் இடங்களுக்கே சென்று வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சோமட்டோ திகழ்கிறது.
இந்த நிறுவனம் மளிகைப் பொருட்களையும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கும் சேவையை ஜூலை மாதத்தில் தொடங்கியது. 15 நிமிடங்களுக்குள் மளிகைப் பொருள் டெலிவரி செய்த போதிலும், நுகர்வோரின் தேவைகளை நிறைவுசெய்வதில் இடைவெளி இருப்பதாகக் கருதுவதால் இந்தச் சேவையை செப்டம்பர் 17ஆம் நாளுடன் முடித்துக்கொள்வதாக மளிகைக் கடைகளுக்கு எழுதியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.