இந்தியாவில் எந்தவொரு வரிச்சலுகையையும் எதிர்பார்க்குமுன் முதலில் மின்சாரக் கார் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என டெஸ்லாவைக் கனரகத் தொழில்கள் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மின்சாரக் கார் தயாரிப்பு ஆலையை இந்தியாவில் அமைக்க உள்ள பொன்னான வாய்ப்பை டெஸ்லா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். மின்சாரக் கார்கள் இறக்குமதிக்கான வரிகளைக் குறைக்க வேண்டும் என டெஸ்லா கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், வரிச்சலுகைகளை எதிர்பார்க்குமுன் முதலில் மின்சாரக் கார் தயாரிப்பு ஆலையை அமைக்க வேண்டும் என்றும், அதன்பின் வரிச்சலுகை அளிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என டெஸ்லாவிடம் கனரகத் தொழில்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.