மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர், பாரதியின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.