ரிலையன்சும், கூகுளும் சேர்ந்து கூட்டாக தயாரிக்கும் விலை குறைவான ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளியின் போது மட்டுமே விற்பனைக்கு வரும் என அறிக்கை ஒன்றில் ஜியோ தெரிவித்துள்ளது.
இன்று இந்த ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சர்வதேச அளவில் செமிகண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அதன் தயாரிப்பு முழுமை அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த போன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களிடம் சோதனைக்கு விடப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் 3 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலை குறைவான Qualcomm QM214 பிளாட்பார்மில் தயாராகும் இந்த போனில், 64 bit CPU மற்றும் டியூவல் ISP சப்போர்ட் இருக்கும் என கூறப்படுகிறது, 13 எம்பி சிங்கிள் லென்ஸ் பின்புற கேமரா மற்றும் செல்பிக்காக 8 எம்பி கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.