ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது, அடுத்த நாட்டுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு இடம் தரக்கூடாது, தீவிரவாதிகளுக்கு பயிற்சியோ நிதியோஅளிக்கக் கூடாது என்று ஐநா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆப்கான் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஐநாவுக்கான நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, அண்டை நாடு என்ற முறையில் ஆப்கானில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியாவை நேரடியாக பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காபூல் விமான நிலையம் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் அந்த மண்ணில் தீவிரவாதம் வேரோடி இருப்பதையே உணர்த்துவதாக உலக நாடுகளை திருமூர்த்தி எச்சரித்தார்