மத்திய பிரதேசத்தில் மது போதையில் ராணுவ வாகனம் மீது பெண் தாக்குதல் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
குவாலியர் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை மறித்த பெண், அதன் மீது அமர்ந்து செல்போன் பேசியவாறும், வாகனத்தின் ஹெட்லைட்டை காலால் உதைத்து சேதப்படுத்தியவாறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பெண்ணை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் பெண் டெல்லியை சேர்ந்த மாடல் என்றும் ஒரு நிகழ்ச்சிக்காக குவாலியர் வந்த நிலையில் சக தோழிகளுடன் ஏற்பட்ட வாக்குவதத்தை தொடர்ந்து சாலைக்கு வந்து அடாவடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ராணுவம் தரப்பில் புகார் தெரிவிக்காத நிலையில் பெண்ணை ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.
class="twitter-tweet">#Watch: On Wednesday night a 22-year-old #girl from #Delhi created #ruckus in #Gwalior. She kicked and broke the headlights of an #Army vehicle. She was reportedly in an inebriated state. She was later detained by #police#MadhyaPradesh #FPJCrime #News #Video pic.twitter.com/2ZgtS3XKVL
— Free Press Journal (@fpjindia) September 9, 2021