தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையை மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். உயர்கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்தத் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்திலும், பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனம் இரண்டாமிடத்திலும் உள்ளன.
பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் ஐந்தாமிடத்தில் உள்ளது. பொறியியல் கல்வியில் சென்னை ஐஐடி முதலிடத்திலும், திருச்சி தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்பதாமிடத்திலும் உள்ளன.
கல்லூரிகளுக்கான தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி மூன்றாமிடத்திலும், கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஐந்தாமிடத்திலும், சென்னை மாநிலக் கல்லூரி ஆறாமிடத்திலும் உள்ளன. மருத்துவப் படிப்பில் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியும், பல் மருத்துவப் படிப்பில் சென்னை சவீதா கல்லூரியும் மூன்றாமிடங்களில் உள்ளன. ஆராய்ச்சிப் படிப்பில் சென்னை ஐஐடி இரண்டாமிடத்தில் உள்ளது.