குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் உரிமைகளை வழங்கும் உண்மையான இஸ்லாமிய ஷரியா சட்டத்தைப் பின்பற்றி தாலிபன் அரசு ஆட்சி செய்தால் உலகிற்கே முன்னுதாரணமாக விளங்கும் என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார்.
1990களில் தாலிபன் வசம் அதிகாரம் இருந்தது போன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டால் ஆப்கானுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் சிக்கல் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தாலிபான் அரசு நல்லாட்சியைத் தரும் என நம்புவதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருந்த நிலையில், மெஹ்பூபாவும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.